இந்தியாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை ஆரம்பித்தது. அதன் கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என்றாலும் பற்றாக்குறை பெரிய அளவில் உள்ளது. இந்நிலையில் வைரலாஜிஸ்ட் சுகன் தீப் காங் இந்தியா தடுப்பூசிகளை பெரிய அளவில் கொள்முதல் செய்வதில் மெத்தனம் காட்டியது எனக் கூறியுள்ளது.