கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 புதிய பாதிப்பு : இந்திய கொரோனா நிலவரம்!

திங்கள், 24 மே 2021 (10:41 IST)
கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பேர் புதிதாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,22,315 பேர் புதிதாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,67,52,447 ஆக உயர்ந்தது. மேலும், புதிதாக 4,454  பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,03,720 ஆக உயர்ந்துள்ளது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,02,544 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,37,28,011  ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 27,20,716 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்