தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா? கஸ்தூரி ஆவேசம்

திங்கள், 24 மே 2021 (09:39 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து இன்று முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து பால் மருந்து பொருட்கள் தவிர வேறு கடைகள் திறக்க அனுமதி இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டு அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்று கருதப்பட்ட நிலையில் திடீரென ஜவுளிக் கடைகளிலும் நகைக் கடைகளிலும் கூட்டம் குவிந்தது. அதிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் மக்களின் பொறுப்பற்ற தன்மை குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் ஆவேசமாக கூறியிருப்பதாவது:
 
முண்டியடிச்சி துணி  நகை வாங்கலையின்னாதான் என்னவாம்? தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா? சேப்டிய விட சேலை முக்கியமா ?  கல்யாணம்/சடங்கு  மாதிரி தவிர்க்கமுடியாத  purchasesகு whatsapp, phone, online எல்லா option உம் இருக்கு. கடைக்கு போயி கொரோனாவை எதுக்கு வாங்கணும்? COVIDIOTS
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்