கொரோனா காலத்தில் மணமக்களை தேடி வரும் திருமண மண்டபம்…

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (16:55 IST)
உலகம் எங்கிலும் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1. 30 கோடிக்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் 8 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சில தளர்வுகளுடன் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமண மண்டபங்களை மக்கள் தேடிப் போவது குறைந்துள்ளது. மக்கள் தம் வீடுகளிலேயே உற்றார், சுற்றத்தாருடன் சிம்ளிளாக திருமணத்தை நடத்துவதைப் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், கொரொனா காலத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் மணமக்களைத் தேடி நடமாடும் திருமண மண்டபங்களுக்கு மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் திருமணங்கள்  எளிமையாகவும் அதே சமயம் மணமக்களின் மனநிறைவுடன் திருமணம் நடத்தும் வண்ணம் நடமாடும் திருமண மண்டபத்தை தனது கனரக வாகத்தில் அமைத்து மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்