செய்யூர் இளம்பெண் தற்கொலை: பதுங்கியிருந்த தேவேந்திரன் கைது!

திங்கள், 13 ஜூலை 2020 (15:04 IST)
செய்யூர் இளம்பெண் தற்கொலை வழக்கு விவகாரத்தில் திமுக நிர்வாகி தேவேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த நைனார் குப்பத்தில் கடந்த 24 ஆம் தேதி சசிகலா என்ற பெண் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்யூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பெயரில் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அன்றே உடல் அடக்கம் செய்யப்பட்டது.  
 
இந்த சம்பவம் நடந்த மறுநாள் சசிகலா தற்கொலையில் மர்மம் இருப்பதாக அவரது அண்ணன் போலீஸில் புகார் அளித்தார். அந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருசோத்தமன் என் தந்தையை கொலை செய்துவிட்டு நடகமாடுவதாக குற்றம்சாட்டினார்.  
 
இந்நிலையில் இந்த வழக்கின் தொடர்பாக தேடப்பட்டு வந்த திமுக நிர்வாகி தேவேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வியாசர்பாடியில் பதுங்கியிருந்த தேவேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்