மீண்டு வருவார் !சிங்கத்துக்கு நிகரானவர் விஜயகாந்த் : விஜய பிரபாகரன் பேச்சு

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (15:42 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில வருடங்களாக பேச முடியாமல் தொண்டை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் கட்சி பொதுக்கூட்டங்களில் அவரது மனைவியும் கட்சி பொருளாரருமான பிரேமலதா விஜயகாந்த் பேசிவந்தார்.

இந்நிலையில் இன்று விருகம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது மகன் விஜய பிரபாகரன் பிறந்த நாள் கொண்டாடினார்.  உடன் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். பிரேமலதா, சண்முக பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
அப்போது விஜய பிரபாகரன் கூறியதாவது:
 
’அப்பா (விஜயகாந்த் ) முதல்வராக வேண்டும் எங்கள் விருப்பம் அதுதான்.அதற்காக நான் என் பங்களிப்பை தருகிறேன்.வரும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் அப்பாவின் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு செல்ல இருக்கிறோம். 
 
அதன் பின் அப்பா பழைய படி சிங்கத்துக்கு நிகரானவராக இருப்பார். தேர்தல் பிரசாரத்திலும் பங்கு கொள்வார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 29 தொகுதியிலும் ஜெயிப்போம் ’இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்