யு-டியூப் மூலம் ஏழு வயதில் 22 மில்லியன் டாலர்கள் சம்பாதித்த அட்டகாச சிறுவன்

செவ்வாய், 4 டிசம்பர் 2018 (16:46 IST)
ஒரு நிமிடம் விழிகளை மூடி உங்கள நினைவென்னும் கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் ஏழு வயதில் நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்களென நினைத்து பாருங்கள். பள்ளியில் சக மாணவனுடன் சண்டையிட்டது, அம்மாவிடம் வாங்கிய செல்ல திட்டுகள் என பல நினைவுகள் வரலாம். ரயான் முப்பது ஆண்டுகளுக்கு பின் தனது ஏழு வயது நினைவுகளை அசைப்போட்டால் அவருக்கு மில்லியன் டாலர்கள் மதிப்புடைய நினைவுகள்தான் வரும்.
ஆம், ஏழு வயதில் ரயான் ஈட்டியது 22 மில்லியன் டாலர்கள். இந்த தொகை யு-டியூப் மூலம் திரட்டப்பட்டது.
 
ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் கணக்கின்படி பொம்மை விமர்சகரான ரயான் பிரபல யு-ட்யூபரான ஜேக் பாலை இரண்டாம் இடத்திற்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
 
ஞாயிற்றுக்கிழமை ரயான் வெளியிட்ட நீல மர்ம முட்டை காணொளியை மட்டும் லட்சகணக்கானவர்கள் பார்த்து இருக்கிறார்கள்.
 
மூன்றாம் இடத்தில் ட்யூட் பெர்ஃபெக்ட் சேனல் 20 மில்லியன் டாலர்கள் ஈட்டி மூன்றாம் இடத்தில் உள்ளது.
 
வரி, ஆலோசகர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளித்த தொகையை சேர்க்காமல் பார்த்தால், அவரது வருவாய் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
 
ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் உங்களுடைய காணொளியை சிறுவர்கள் விரும்புவதற்கு காரணமென்ன என்ற கேள்விக்கு ரயான், "என்னுடைய காணொளிகள் பொழுதுபோக்குடனும், வேடிக்கையாகவும் இருப்பதுதான் காரணம்" என்று கூறி உள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்