நேற்று விஜயகாந்த் இன்று ஸ்டாலின் நாளை யாரோ? வைகோ ராசி அப்படி...

வெள்ளி, 7 டிசம்பர் 2018 (18:45 IST)
மு.க.ஸ்டாலினை அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமென்பதே வைகோவின் குறிக்கோள் உறவு கொண்டாடி திமுக தலைவர் ஸ்டாலினை வீழ்த்தி விடுவார் என கரூரில் பாஜக துணைத் தலைவர் அரசக்குமார் பேட்டி அளித்துள்ளார். 
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் பாஜக சார்பில் நடைபெற்றது. கரூரில் உள்ள கோவை ரோட்டில் உள்ள பிஎல்ஏ அமிர்த் இன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாஜக மாநிலத்துணை தலைவர் பி.டி.அரசக்குமார் சிறப்புரையாற்ற கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது, கஜா புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநில அரசு சார்பில் ரூ.15 ஆயிரம் கோடி கேட்கப்பட்ட நிலையில், முதலில் இரண்டு கட்டங்களாக இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. பணமாக கேட்கின்றார்கள் அதை கொடுக்க வில்லை என்பதுதான் மக்களுக்கு தெரியும். 
 
மின்சாரம் இல்லாத ஊர்களுக்கு மின்சாரம் உருவாக்கி தருவது, தார்ப்பாய் கொடுப்பது என்று துறைரீதியான நடவடிக்கைகளுக்கு முதலில் அந்தந்த துறைகளுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படுகின்றது என்றார். ஆகவே, மத்திய குழு பார்வையிட்டதற்கும், தமிழக அரசு கொடுக்கப்பட்ட பாதிப்பு பணிகளை ஒப்பிட்டு பார்த்து முடிவெடுக்கப்பட்டு அனைத்தும் துறை ரீதியாக செயல்படுத்தப்படுமென்றார். 
ராமர்கோயில் கட்டியே தீரப்படும் என்று பாஜக இல.கணேசன் இன்று கூறியிருக்கின்றாரே என்று கேள்வி கேட்டதற்கு., அண்ணன் இல.கணேசன் பாஜகவின் மூத்த தலைவர், மேலும், இது இந்து அமைப்புகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் தீவிரமாகும். மேலும் அந்த திட்டம் மத்திய அரசுடையது என்றார். 
 
வைகோ வின் அரசியல் நிலவரம் குறித்து கேள்வி கேட்டதற்கு, வைகோ மு.க.ஸ்டாலினை அரசியலில் இருந்து விரட்ட அவருடன் தற்போது உறவு கொண்டாடி அழிக்க உள்ளார். முன்பு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். நேற்று விஜயகாந்த், இன்று மு.க.ஸ்டாலின் நாளை யாரோ? என வைகோவை கலாய்த்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்