ஓட்டை விழுந்த படகு கடலில் மூழ்கும் பதறவைக்கும் காட்சி...

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (14:23 IST)
புதுச்சேரி அருகே கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகுகள் பழுதான நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக கடலில் மூழ்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
புதுச்சேரி அருகேயுள்ள வீராம்பட்டினம் பகுதியில் வசிக்கும், பிரசாந்த், சாமிநாதன் உள்ளிட்ட மொத்தம் 8 மீனவர்கள், கடந்த வியாழன் அன்று இரவில் கடலிக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.  
 
அப்போது, முதலியார்சாவடி என்ற கடல் பகுதியில் படகு  சென்றபோது, அதிகாலையில் படகின்  என்ஜினில் ஓட்டை விழுந்து கடலி நீர் புகுந்தது. பின்னர், மீனவர்கள் சமயோஜிதமான தங்களை மீட்கும் படி தகவல் கொடுத்தனர். அதன்படி 8 மீனவர்களும் பத்திரமாக மீட்டப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்