ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள்: 2வது புயலின் பெயர் அறிவிப்பு!

புதன், 30 அக்டோபர் 2019 (21:42 IST)
அரபிக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன் கியார் என்ற புயல் ஏற்பட்டு அந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் தற்போது அதே அரபிக்கடலில் மேலும் ஒரு புயல் தோன்றியுள்ளது
 
லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடலை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது என்றும் இந்த புயலுக்கு 'மஹா' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புதிய புயலால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
 
ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தென்கிழக்குஅரபிக் கடல் பகுதிக்கு அக்டோபர் 31-ம் தேதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் ஒரே நேரத்தில் இரண்டு புயல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்