உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை.. வெளியே வர கடைசி வாய்ப்பா?

Siva
புதன், 15 மே 2024 (08:04 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராகவும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் வழக்கு தொடுத்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு மற்றும் வழக்கு விசாரணையை ரத்து செய்ய கோரிக்கை விடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நிலையில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டது.

இதனை அடுத்து மே 15ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின் போது அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யும் என்றும் அந்த பதிலில் என்ன இருக்கிறது என்பதை பொறுத்து செந்தில் பாலாஜி தரப்பின் வாதம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை செந்தில் பாலாஜி அழிக்க வாய்ப்பு இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று அவருக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படுமா? அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் கோரிக்கை ஏற்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் அவர் ஜாமீன் பெறுவதற்கு வழக்கில் இருந்து தப்பிப்பதற்கு இது கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது. 

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்