பாலியல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன்.! பெங்களூர் சிறையிலிருந்து விடுதலை..!!

Senthil Velan

செவ்வாய், 14 மே 2024 (18:57 IST)
பெண் கடத்தல் வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து ஜேடிஎஸ் எம்எல்ஏ- எச்.டி.ரேவண்ணா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
 
கர்நாடக முன்னாள் அமைச்சரும், ஜேடி(எஸ்) தலைவருமானவர் எச்.டி.ரேவண்ணா, அவரது மகனும், ஹசன் தொகுதி எம்பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதும் பாலியல் புகார் இருந்தது.
 
பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து அவற்றை வீடியோவாக பதிவு செய்தார். இந்த வீடியோக்கள் அம்மாநிலத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணா வெளநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். 
 
பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அவரது தந்தை மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் ஒருவரை, எச்.டி.ரேவண்ணா தூண்டுதலின்பேரில் அவரது ஆதரவாளர்கள் கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. 
 
இந்த சம்பவம் தொடர்பாக கே.ஆர்.நகர் போலீஸார் எச்.டி.ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கடந்த 4ம் தேதி கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

ALSO READ: டெல்லி IT அலுவலகத்தில் தீ விபத்து.! 7 ஊழியர்கள் பத்திரமாக மீட்பு..!!

இந்நிலையில் மக்கள் பிரதிநிதிகளுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் எச்.டி.ரேவண்ணாவுக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து எச்.டி.ரேவண்ணா இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்