வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் இன்று நேற்றிரவு கரையை கடந்த நிலையில், பல மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மேலும் 5 மாவட்டங்களில் கன மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சால் புயல் நேற்று நள்ளிரவு கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இதன் தாக்கம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் புதுவையிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி ஆகிய பகுதிகளில் லேசான மழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும் இன்றைய கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.