ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சென்னை பல தீவுகள் போல காட்சியளித்தது. பெரும்பாலான சாலைகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் தற்போது வெள்ள நீரை வடிக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.