சமந்தாவின் சண்டை போடும் வீடியோ வைரல் !

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (18:02 IST)
இதுவரை வெளியான வெப் தொடர்களிலேயே அதிக விமர்சனத்திற்கு உள்ளான வெப் தொடர் என சமந்தாவின் தி ஃபேமிலி மேன் 2 தொடர் பெயர் எடுத்துள்ளது., இருப்பினும் இத் தொடருக்கு விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமந்தாவுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

ஈழப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி உருவாக்கியுள்ள  தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது,. இத்தொடரில் நடித்துள்ள சமந்தாவுக்கு பலரும் விமர்சனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தி ஃபேமிலி மேன் தொடருக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் இத்தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், தி ஃபேமிலி மேன் தொடரில் சண்டைப் பயிற்சி இயக்குநர் யானிக் பென்னின் ஆலோசனைப் படி பயிற்சி எடுத்து டூப் போடாமல் சண்டை போட்டதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா ,மந்தனா உள்ளிட்ட பலரும் லைக்குகள் பதிவிட்டு பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்