தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலைக்கு என்ன காரணம்? விசாரணையில் திடுக் தகவல்!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (17:25 IST)
திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மனைவி நதியா இன்று காலை திடீரென தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி திமுகவினர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது 
 
இந்த நிலையில் கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை செய்தனர். தமிழன் பிரசன்னாவிடம் முதல்கட்ட விசாரணை செய்தபோது தனது மனைவி தனது பிறந்த நாளை இன்று சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விரும்பியதாகவும் ஆனால் ஊரடங்கு நேரத்தில் எளிமையாகக் கொண்டாடலாம் என்று தான் கூறியதாகவும் இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்
 
இதன் காரணமாகத்தான் நதியா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாகவே தமிழன் பிரசன்னாவுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப சண்டை நடந்து வந்ததாகவும் இன்றைய விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலிஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்