சென்னை உள்பட சில மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும், வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாகவும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில், இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏற்கனவே, நேற்று இரவு முதல் சென்னையில் பல இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதும், இன்று காலை மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.