சென்னையில் இன்று 15 முதல் 20 நிமிடங்கள் வரை கனமழை வெளுத்து வாங்க போகிறது என்றும், ஆனால் இது வெறும் டிரைலர் தான், சென்னை இன்னும் பெரும் மழைக்கு காத்திருக்கிறது என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து கொண்டிருக்கும் நிலையில், வங்கக் கடலில் உருவாக இருக்கும் காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை உள்பட கடலோர பகுதி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இது குறித்து கூறிய போது, சென்னையில் இன்று சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு மழை வெளுத்து வாங்க போகிறது என்றும், ஆனால் இது வரும் டிரைலர் தான். இன்று இரவு மற்றும் நாளை காலை தான் ஆட்டம் ஆரம்பிக்கும் என்றும் கூறியுள்ளார்.