தேசிய கீதத்தை புறக்கணித்த ஆளுநர்! திடீரென சபையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு..!

Mahendran
திங்கள், 12 பிப்ரவரி 2024 (11:19 IST)
இன்று சட்டசபையில் ஆளுநர் உரையை புறக்கணித்த ஆளுநர் ரவி அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே திடீரென சபையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழ்நாடு சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசின் உரையை படிக்க மறுத்ததை அடுத்து சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்தார். 
 
மேலும்  சட்டசபை தொடங்கும் முன்பே  தேசிய கீதம் பாட வேண்டும் என்றும் அதேபோல் சட்டசபை முடியும் போதும் தேசிய கீதம் பாட வேண்டும் என்றும் ஆளுநர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை 
 
 இதனை அடுத்து ஆளுநர் உரையை ரவி புறக்கணித்த நிலையில் சட்டசபை அலுவல் முடிந்ததும் தேசிய கீதம் பாடப்பட்டது. ஆனால் தேசிய கீதம் இசைக்கும் முன்னரே ஆளுநர் ரவி திடீரென சபையில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
இந்த நிலையில்  ஆளுநர் ரவி சட்டசபைக்கு வந்து உரையை படித்தது இதுவே கடைசியாக இருக்கும் என காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்