ஆளுனர் ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்: டிஆர் பாலு

Mahendran

செவ்வாய், 30 ஜனவரி 2024 (15:11 IST)
நாடாளுமன்ற கூட்டம் நாளை தொடங்க இருக்கும் நிலையில் தமிழக ஆளுநர் ரவி மீது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என திமுக எம்பி டிஆர் பாலு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஆர் பாலு, ஆளுநர் ரவிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். 
 
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஆளுநர் இடையூறு ஏற்படுத்துகிறார் என்றும் அதனால் அவர் மீது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். 
 
ஆனால் அதே நேரத்தில் பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் கவனம் ஈர்ப்பு தீர்மானங்கள் எதுவும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள விடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  
 
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விரிவான விவாதம் நடத்த வலியுறுத்தப்படும் என்றும் டி ஆர் பாலு தெரிவித்தார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்