பொதுநிவாரண நிதிக்கு தாரளமான நிதி வழங்கலாம் - முதல்வர் ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (19:17 IST)
பொதுநிவாரண நிதிக்கு தாரளமான நிதி வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக அமைப்புகள், பெருந்ந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வருடம் உருமாறிய கொரொனா வைரஸில் இரண்டாம் அலை முந்திய வைரஸைவிட அதிக பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இத்தொற்றால்,இந்தியாவில் ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தமிழகத்தில்  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க  தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றன.

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு தாரளமான நிதி வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக அமைப்புகள், பெருந்ந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாவது:  பொதுமக்கள், சமூக அமைப்புகள், பெருந்ந்தொழில் நிறுவனங்கள் தாராளமான நன்கஒ அடை அளிக்கலாம் இதுகுறித்த செலவினஙக்ள் பொதுவெளியில் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்