ஐபிஎல்-2021 தொடர் இல்லாததால் இத்தனை ஆயிரம் கோடி இழப்பு

திங்கள், 10 மே 2021 (21:11 IST)
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தை ஒட்டி நடைபெறும் ஐபிஎல் தொடர் கடந்தாண்டில் இந்தியாவில் நடைபெறாவிட்டாலும் இந்த ஆண்டில் இந்தியாவில் நடைபெற்றது.

நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் சீசன்14 கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால், பிசிசிஐக்கு ரூ.2500 கோடி இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் மக்களின் பெரும் பொழுதுபோக்காகக் கருத்தப்படும் ஐபிஎல் திருவிழா மீண்டும் இந்தியாவில் நடைபெறுமா? இல்லை கடந்தாண்டு துபாயில் நடைபெற்றது போல் வேறு நாட்டில் நடைபெறுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.  இதற்கு பிசிசிஐ விரைவில் பதில் கூறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்