தேர்தல் 2019: நோட்டா ஏற்படுத்திய தாக்கம் என்ன?

Webdunia
ஞாயிறு, 26 மே 2019 (10:19 IST)
நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் வெளியாகின, இதில் நோட்டாவின் தாக்க்கம் எவ்வாறாக உள்ளது என தெரிதுக்கொள்வோம். 
 
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் மீதமுள்ள 38 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 5,53,349 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. 
 
இதில் அதிகப்பட்சமாக ஸ்ரீபெரும்புதூரில் 23,343 நோட்டா வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தப்பட்சமாக, கன்னியாகுமரியில் 6,131 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன. 
 
கடந்த 2014 தேர்தலோடு ஒப்பிடும்போது, இந்தாண்டு பதிவான நோட்டா வாக்குகளின் எண்ணிக்கை சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சீமானின் நாம் தமிழர் கட்சியும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் நோட்டாவுக்கான வாக்குகளை குறைத்துள்ளது என கூறப்படுகிறது. 
 
தேசிய அளவில் பதிவான வாக்குகளில் சுமார் 1.04% வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளன. பிகார் மாநிலத்தில் அதிகப்பட்சமாக 8,17,139 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். குறைந்தபட்சமாக டெல்லியில் 1%த்துக்கும் குறைவான வாக்குகள் நோட்டாவுக்கு பதிவாகியுள்ளன.
 
இம்முறை அரசு ஊழியர்கள் செலுத்திய தபால் வாக்குகளில் கூட நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்