முடிவுக்கு வருமா நடிகர்களின் அரசியல் ஆசை?

சனி, 25 மே 2019 (13:25 IST)
தமிழகத்தில் எம்ஜிஆரும், ஆந்திராவில் என்.டி.ஆரும் தவிர அதற்கு பின்னர் நடிகர்கள் ஆரம்பித்த எந்த கட்சியும் மக்கள் மனதை கவர தவறிவிட்டன.
 
ஆந்திராவில் சிரஞ்சீவி, பவன்கல்யாண் ஆகியோர் ஆரம்பித்த கட்சிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. அதேபோல் தமிழகத்தில் சிவாஜி கணேசன், விஜயகாந்த், டி.ராஜேந்தர், பாக்யராஜ், முதல் கடைசியாக கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் வரை ஓரளவு ஓட்டுக்களை பிரிக்க முடிந்ததே தவிர தொகுதிகளை கைப்பற்றும் அளவுக்கு ஓட்டுக்களை பெற முடியவில்லை. 
 
எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருந்தாலும் அரசியலில் பல ஆண்டுகாலம் தாக்குப்பிடித்து கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள். இன்றைய நடிகர்கள் போல் ஒரே ஆண்டில் முதல்வராக வேண்டும் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை.
 
மேலும் தற்போது சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி அதிகம் இருப்பதால் நடிகர்களின் வார்த்தை ஜாலங்கள் இனி அரசியலில் எடுபடாது என்பதையே சமீபத்திய நிகழ்வுகள் காண்பிக்கின்றன. இதை மனதில் வைத்து முதல்வர் கனவில் இருக்கும் மற்ற நடிகர்கள் இனிமேலாவது நடிப்பை மட்டும் கவனித்தால் அவர்களுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது என்பதே அரசியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்