பிரதமராக மோடி மீண்டும் தேர்வு! 30ஆம் தேதி பதவியேற்கிறார்

சனி, 25 மே 2019 (18:05 IST)
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி நாடு முழுவதிலும் 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதா கட்சி மட்டுமே 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் கூட்டணி கட்சிகள் உள்பட எந்த கட்சியின் துணையும் இன்றி மீண்டும் ஆட்சி அமைக்கின்றது
 
இந்த நிலையில் சற்றுமுன் டெல்லியில் பாஜக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி ஆகியோர்கள் உள்பட பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள் என்பது பற்றி ஆலோசனை முதலில் நடத்தப்பட்டது. அதன்பின் புதியதாக வெற்றி பெற்ற எம்பிக்கள் மீண்டும் மோடியை பிரதமராக தேர்வு செய்தனர். 

இதில் நரேந்திர மோடியை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராகவும் ஒரு மனதாக தேர்வு செய்துள்ளார்கள். 
 
தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், அன்புமணி, சரத்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்