கமலுக்கு கோவை தொகுதி இல்லை.. திமுக ஒதுக்கிய தொகுதியால் மநீம அதிருப்தி?

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (17:26 IST)
வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசன் இடம் பெறுவார் என்றும் அவருக்கு கோவை பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது கோவையில் எம்பியாக இருக்கும் இடது கம்யூனிஸ்ட் கோவை தொகுதியை விட்டு தர மறுத்துள்ளதாகவும் அந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளதால் சிட்டிங் தொகுதியை விட்டுக் கொடுக்க முடியாது என்ற கூறியுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.  
 
எனவே கம்யூனிஸ்ட், கமல் என்று இரண்டு பேரையும் ஒப்பிட்டு பார்க்கும்போது கம்யூனிஸ்ட் சொல்வது சரி என்று முடிவு செய்த திமுக தலைமை கமல்ஹாசனுக்கு வேறு தொகுதியை கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது,
 
 குறிப்பாக பெரம்பலூர் தொகுதியை கமலுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிடப் போகிறார் என்பதால் அவரை எதிர்த்து கமல்ஹாசனால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் மக்கள் நீதி மய்யம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்