பாஜகவில் இணைந்து வரும் கோவை மாவட்ட செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்: திமுக அதிர்ச்சி..

திங்கள், 25 டிசம்பர் 2023 (11:28 IST)
அதிமுகவின் கோட்டை ஆக இருந்த கோவை மாவட்டம் செந்தில் பாலாஜி பொறுப்புக்கு வந்த பின்னர் திமுகவின் கோட்டையாக மாறி வருவதாக கூறப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் தான் கோவை மாவட்டத்தில் இருந்தது.
 
இந்த நிலையில் செந்தில் பாலாஜி சிறையில் சென்ற இந்த சில மாதங்களில் அவருடைய ஆதரவாளர்கள்  அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. நம் அமைச்சரையே திமுகவால் காப்பாற்ற முடியவில்லை என்ற நிலையில் தொண்டர்களை எப்படி காப்பாற்றுவார்கள் என்று புலம்பி வருவதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக இருந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் தற்போது பாஜகவிலும் ஒரு சிலர் அதிமுகவிலும் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
 
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக இருந்த திமுகவின் கீழ்மட்ட நிர்வாகிகள் பலர் அதிமுக பாஜகவிற்கு தாவ தொடங்கியுள்ளதால் திமுக அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கோவையை தக்க வைத்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்