இனி டெபிட், கிரெடிட் கார்டு மூலமும் டிக்கெட் பெறலாம்: சென்னை மெட்ரோ அறிவிப்பு..!

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (15:10 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இனி டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் டிக்கெட் பெறுவதற்கான இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
இதுவரை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளை டிக்கெட் கொடுக்கும்  ஊழியர்களிடம் கொடுத்து தான் பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. தற்போது இதற்கான தனியாக இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகளே டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வசதி மெட்ரோ ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு  கூடுதல் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டு இருக்கும் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் மூலம் பயணிகள் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி கட்டணத்திற்கான தொகையை சகித்துக் கொள்ளலாம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே வாட்ஸ் அப், க்யூஆர் கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி இருக்கும் நிலையில் தற்போது இந்த கூடுதல் வசதியை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்