சென்னையில் நாளை பள்ளிகள் இயங்குமா? மாவட்ட கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பு..!

வெள்ளி, 21 ஜூலை 2023 (15:49 IST)
வழக்கமாக இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை நான்காவது சனிக்கிழமையாக இருந்தாலும் சென்னையில் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் மழை காரணமாக கடந்த ஜூன் மாதம்  விடுமுறை விடப்பட்ட நிலையில் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார் 
 
சென்னையில் நாளை 6ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளதை அடுத்து நாளை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்