மகளிர் உரிமைத்தொகையின் கோபம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: ஜெயக்குமார்

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (15:04 IST)
மகளிர் உரிமை தொகை கிடைக்காத மகளிர்களின் கோபம் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக எதிரொலிக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  
 
திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர்க்கு மாதம் ரூபாய் 1000 திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது. இதற்கான டோக்கன் கொடுக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில்  திமுக உறுப்பினர்களுக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
திமுக உறுப்பினர் அட்டை வைத்துள்ள பெண்களுக்கு மட்டுமே  உரிமை தொகை டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களின் கோபம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்