விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு: விசாரணை அதிகாரி நியமனம்..!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (13:30 IST)
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு சமீபத்தில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 
 
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஏராளமான பெண்கள் பாலியல் தொல்லை செய்யப்படுகிறார்கள் என்றும் ஒருத்தர் காணாமல் போய் உள்ளதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த புகார் குறித்து தமிழக காவல்துறையினர் விசாரணை செய்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் நான்கு காவல் ஆய்வாளர்கள் குழு விசாரணைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. இந்த வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இந்த வழக்கு விறுவிறுப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்