கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு.. சிபிசிஐடி முக்கிய தகவல்!

புதன், 1 பிப்ரவரி 2023 (16:19 IST)
கள்ளக்குறிச்சி மாணவியின் மரண வழக்கில் உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி முக்கிய தகவலை அளித்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் இன்னும் நான்கு வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கைக்காக காத்திருக்கின்றோம் என்றும் உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
 
கள்ளக்குறிச்சி மாணவ மரண வழக்கில் விசாரணையை முறையாக நடத்த கோரி மாணவியின் தந்தை தொடங்க வழக்கு நான்கு வாரங்களுக்கு இதனால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்