கடந்த 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியான நிலையில், இந்த தாக்குதலுக்கு தொடர்புடைய பாகிஸ்தான் தஹாவூர் ராணா என்பவர் கடந்த 209 ஆம் ஆண்டு அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் அமெரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை செய்த அமெரிக்க நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அனுமதி அளித்தது. ஆனால் இதை எதிர்த்து, ராணா அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவின் மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடந்தது.
இந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து, அவர் இன்னும் சில நாட்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் விசாரணை மேற்கொண்டால், இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் மும்பை வெடிகுண்டு குறித்து தெரிய வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.