இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுலா அட்டை (1-நாள் சுற்றுலா அட்டை மற்றும் 30-நாள் சுற்றுலா அட்டை) பிப்ரவரி 1, 2025 முதல் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைத்து பயணிகளுக்கும் தடையற்ற மற்றும் எளிமையான பயணங்களை வழங்கி வருகிறது. சுற்றுலா அட்டைகள் இனி பயன்படுத்த முடியாது என்றாலும், பயணிகள் தங்கள் பயண தேவைகளுக்கு டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், க்யூ ஆர் குறியீடு அடிப்படையில் பயணச்சீட்டுகள், ஒற்றை பயண டோக்கன்கள் மற்றும் தேசிய பொது போக்குவரத்து அட்டை(National Common Mobility Card) உள்ளிட்ட மாற்று பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோவில் தொடர்ந்து பயணிக்கலாம்.
மெட்ரோ பயண அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முழு முயற்சி எடுத்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.