உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுனரிடம் மனு அளித்த பாஜக..!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (11:31 IST)
சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில், வெறுப்புப் பிரச்சாரம் செய்த அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் உத்தரவிடக் கோரி பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.
 
மேலும் அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது செய்த பதவிப் பிரமாணத்தை மீறி, சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
 
பாஜகவின் மூத்த தலைவர்கள், மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். ஆளுனர் இந்த மனு மீது நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்