சனாதனத்தை விமர்சிப்பவர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் - மன்னார்குடி ஜீயர் கருத்து

வியாழன், 7 செப்டம்பர் 2023 (08:01 IST)
சனாதனத்தை விமர்சனம் செய்பவர்களை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர்  கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் உதயநிதி பேசிய சனாதனத்தை ஒழிப்போம் என்ற பேச்சு பெறும் விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்னார்குடி ஸ்ரீசெண்டலங்கார ஜீயர் கூறிய போது 'ஒரு மாநிலத்தின் அமைச்சர் என்பவர் அரசின் ஒரு அங்கம் என்றும் ஜாதி மத பாகுபாடு பார்க்கக்கூடாது என்றும் ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்க கூடாது என்றும் தெரிவித்தார். 
 
எல்லா ஜாதியும் மதமும் ஒன்று என்று மசூதியில் அல்லது தேவாலயத்தில் அவரால் பேச முடியுமா? ஜாதி மத பாகுபாடு இல்லை என்று கூறுவோர் தேர்தலில் போட்டியிடும் போது ஜாதி இல்லாதவர் என்று பிரகடனம் செய்ய முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். 
 
சனாதனத்தை விமர்சிப்பவர்களையும் இந்துக்களுக்கு விரோதமாக பேசுபவர்களையும் இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்றும் சனாதனம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்றும் அதில் ஜாதி மதம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்