வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Mahendran

செவ்வாய், 25 ஜூன் 2024 (19:38 IST)
தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
முன்னதாக தமிழ்நாட்டு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதி சீட்டு பெறாமல், வெளி மாநிலங்களில் உள்ள ஆம்னி பேருந்துகளுக்கு  தமிழ்நாடு மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை தெரிவித்து இருந்தது. ஜூன் 14ஆம் தேதிக்கு பிறகு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்