ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்த தயார்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!

வியாழன், 7 செப்டம்பர் 2023 (08:05 IST)
சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஒரே நாடு ஒரே தேர்தலை சந்திக்க தயார் என தலைமை தேர்தல் ஆணைய தெரிவித்துள்ளார் 
 
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் போது நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் காங்கிரஸ் திமுக உள்பட எதிர்கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில்  தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்த போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை திட்டங்களுக்கு உட்படுத்து செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.  அவரது கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்