இவரை போன்ற முட்டாள்கள் எல்லாம் அமைச்சரா? சேகர்பாபு குறித்து அண்ணாமலை..!

வியாழன், 7 செப்டம்பர் 2023 (10:27 IST)
இவரைப் போன்ற முட்டாள்கள் இருந்தால் எப்படி மாநிலம் உருப்படும் என அமைச்சர் சேகர்பாபு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் அமைச்சர் சேகர் பாபு ’சனாதனம் என்பது வாழைப்பழத்தின் தோல் என்றும் இந்து மதம் என்பது வாழைப்பழம் என்றும் வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
இந்த உதாரணத்துக்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை ’இனிமேல் கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கும்போது கடைக்காரரிடமே வாழைப்பழத்தின் தோலை உரித்துக்கொடுங்கள் என்று கேட்க வேண்டும் 
 
அதேபோல் அறநிலை துறை கோவிலுக்கு வாழைப்பழம் வாங்க போது, சென்னையில் இருந்தே வாழைப்பழத்தின் தோலை உரித்து அதன் பின்னர் கோவில்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார். இது போன்ற முட்டாள்கள் எல்லாம் அமைச்சர்களாக இருந்தால் எப்படி மாநிலம் உருப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்