6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

Siva

செவ்வாய், 25 ஜூன் 2024 (21:10 IST)
தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் உள்ள திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் நீலகிரி ஆகிய ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.
 
மேலும் ஜூன்  27ஆம் தேதி தமிழகத்தில் சில இடங்களிலும் 28 முதல் ஜூலை 1ஆம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மற்றும் மாலை அல்லது இரவு வேளையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் 35 முதல் 45 கிலோமீட்டர் வரை சூறைக்காற்று வீசும் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்