சதுரகிரியில் 20 மணி நேரத்துக்குப் பின் கட்டுக்குள் வந்த காட்டுத் தீ: போராடி தீயை அணைத்த வீரர்கள்..!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (17:38 IST)
சதுரகிரியில் 20 மணி நேரமாக எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீ தற்போது கட்டுக்குள் வந்துள்ளதாகவும் இதனை அடுத்து பக்தர்கள் பாதுகாப்பாக தரை இறங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
சதுரகிரியில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஜூலை 15 முதல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று திடீரென காட்டுப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது
 
இதனை அடுத்து சுமார் 3000 பக்தர்கள் தரை இறங்க முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் 20 மணி நேரம் போராடி தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்
 
இதனை அடுத்து பக்தர்கள் சிறிது சிறிதாக தரையிறங்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் வனத்துறை என தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்