ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா: குவியும் பக்தர்கள்..!

செவ்வாய், 11 ஜூலை 2023 (18:29 IST)
ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலில் ஆடி மாத திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக இருக்கும் நிலையில் நாளை மறுநாள் இந்த விழா தொடங்குவதாக கோவில் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். 
 
நாளை மறுநாள் தொடங்கும் ஆடி திருக்கல்யாண திருவிழா 29ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
 
ஆடி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி ஜூலை 21 ஆம் தேதியும் ராமநாத சுவாமி பர்ப பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் ஜூலை 24ஆம் தேதி நடைபெறும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்