உலகின் மிகப்பெரிய விஷ்ணு மரசிலை பிரதிஷ்டை: ஐதராபாத் பக்தர்கள் பரவசம்..!

செவ்வாய், 4 ஜூலை 2023 (18:21 IST)
உலகின் மிகப்பெரிய மரத்தால் ஆன விஷ்ணு சிலை ஐதராபாத் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் அதை பார்த்து பரவசமடைந்துள்ளனர் 
 
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நியூபோய்ன் பாலியில் யாதாத்திரி என்ற கோவிலில் தனியார் நிறுவனம் ஒரே மரத்தால் ஆன உலகின் மிகப்பெரிய விஷ்ணு சிலையை வடிவமைத்துள்ளது.
 
21 அடி அகலம் 8.5 அடி உயரம் கொண்ட இந்த சிலை தான் உலகின் மிகப்பெரிய மரத்தால் ஆன விஷ்ணு சிலை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பழமையான தேக்கு மரத்தால் செய்யப்பட்ட இந்த சிலைக்கு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த மரச்சிலையை பார்ப்பதற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் என்பதும் சிலையை பார்த்து பரவசமாக வழிபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்