''எதிர்க்கட்சிகள் ஒற்றுமையால் பாஜக அச்சத்தில் இருக்கிறது'' - மல்லிகார்ஜூன கார்க்கே

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (17:31 IST)
''எதிர்க்கட்சிகள் ஒற்றுமையால் பாஜக அச்சத்தில் இருக்கிறது'' காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே கூறியுள்ளார்.

இன்று பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இந்த ஆலோசனை கூட்டத்தின் பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே

''எதிர்க்கட்சிகள் ஒற்றுமையால் பாஜக அச்சத்தில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்துள்ளோம்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 2 கட்சிகள்  ஒன்றிணைந்து  I.N.D.I.A  கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மெகா கூட்டணியை வழி நட்த்துவதற்காக 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும், இந்தக் குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது பற்றி அடுத்த ஆலோசானைகூட்டம்  நடைபெறும் மும்பை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்