சத்தீஸ்கர் மாநிலத்தில் 19 வயது அங்கூர் என்ற இளம் பெண் டிசம்பர் 29 ஆம் தேதி அன்று இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீம் செய்து கொண்டிருந்தார். அவரது நேரலையை சுமார் 20க்கும் மேற்பட்டோர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் நேரலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது நேரலையை பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக தடுக்க முயன்றனர். மேலும், சிலர் அவர் வீட்டிற்கு விரைந்தனர்.
அவரது பெற்றோர் ஹைதராபாத்தில் கூலி தொழிலாளர்களாக இருப்பதாகவும், காதலில் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கூர் மொபைல் போனில் தான் நேரத்தை செலவிடுவார் என்றும் கிராம மக்கள் கூறிய நிலையில், அவருடைய செல்போனை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.