சதுரகிரி மலைபாதையில் காட்டுத்தீ: 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்..!

செவ்வாய், 18 ஜூலை 2023 (07:25 IST)
சதுரகிரி மலைபாதையில் காட்டுத்தீ ஏற்பட்டதை அடுத்து அங்கு சுந்தரமாகலிங்கம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சிக்கிக் கொண்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக்கு சென்று உள்ளனர் என்பதும் விசேஷமாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சதுரகிரி மலைப்பாதை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து 3000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையில் சிக்கி தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 மலைக்கோவிலில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் இருக்கும் நிலையில் மீட்பு படையினர் அவர்களை மீட்க தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்