திருச்சி அருகே 1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

Webdunia
ஞாயிறு, 14 ஜனவரி 2018 (15:29 IST)
திருச்சி துறையூரை அடுத்த உப்பிலாபுரத்தில் ரூ 1 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், பழைய ரூபாய் நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவுருத்தப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியாபுரம் சாலையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்தவழியாகச் வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தனர். கார்களில் மதிப்பிழக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. இவர்கள் காரில் துறையூர் வழியாக சேலத்துக்கு பணத்தை எடுத்துச் செல்வது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் உப்பிலியபுரம் போலீஸார் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரிடமும்  தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்