விமானத்தில் கருப்பு பணத்தை கடத்தி வந்த பணிப்பெண் ; மாபியா கும்பலின் நூதன மோசடி

செவ்வாய், 9 ஜனவரி 2018 (18:13 IST)
ஜெட் விமான நிலையத்தில் பணிபுரியும் ஒரு விமான பணிப்பெண் மூலம் மாபியா கும்பல் ஒன்று கருப்பு பணத்தை பல வருடங்களாக கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

 
ஹாங்காக்கில் செயல்படும் ஒரு மாபியா கும்பல் ஜெட் ஏர்வேஸில் விமான பணிபெண்ணாக பணிபுரியும் தேவ்ஷி குல்ஷ்ரேஷ்தா என்பவரை தங்கள் பக்கம் இழுத்து, இந்தியர்கள் சிலரிடமிருந்து கருப்பு பணத்தை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வந்துள்ளது. இதற்கு லஞ்சமாக அப்பெண்ணிற்கு பணமும் கொடுத்து வந்துள்ளனர்.
 
அவர் கடத்தில் செல்லும் பணம் தங்கமாகவோ, டாலராகவோ மற்றப்பட்டு நன்கொடை என்ற பெயரில், கருப்பு பணத்தை யார் அனுப்பினார்களோ அவர்களுக்கே திருப்பி அனுப்பி வந்துள்ளனர்.
 
பல நாட்களாக நடந்து வந்த மோசடி நேற்று டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலையங்கள் சோதனை பலமாக இருக்கும் என்பதாலும், விமான பணிப்பெண்கள் பெரிதாக சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்பதாலும் தேவ்ஷியை பயன்படுத்தி அந்த மாபியா கும்பல் கருப்பப் பணத்தை மாற்றி வந்துள்ளது. 
 
இதையடுத்து, தேவ்ஷியை போலீசர் கைது செய்து விசாரணை நடத்தினர். ஓவ்வொரு முறையூம் ரூ.10 லட்சம் மதிப்புடைய கருப்புப் பணத்தை அவர் தன்னுடைய பணிப்பெண் உடையில் மறைத்து வைத்து கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்