பிரசாரம் முடித்து திரும்பியபோது என் மீது துப்பாக்கி சூடு: ஓவைசி அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (19:57 IST)
தேர்தல் பிரசாரம் முடித்து விட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது என் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர் என ஒவைசி குற்றஞ்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏஐஎம்ஐஎம்  தலைவர் ஓவைசி சென்றிருந்தார்
 
இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து விட்டு திரும்பிய போது எனது காரின் மீது 4 பேர் துப்பாக்கி சூடு நடத்தினர் என்றும் அதிர்ச்சியுடன் ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசிதெரிவித்துள்ளார்
 
 துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்