துப்பாக்கிகளை உடனே ஒப்படைக்க வேண்டும்: சென்னை மக்களுக்கு காவல்துறை உத்தரவு!

புதன், 2 பிப்ரவரி 2022 (11:08 IST)
பாதுகாப்பு காரணங்களுக்காக லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் உடனடியாக துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை அடுத்து சென்னை மற்றும் புறநகரில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போர் அவற்றை காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
 
சென்னை, தாம்பரம், ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிமம் பெற்ற 2000 பேர் துப்பாக்கிகள் வைத்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தங்களுடைய துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்